பொன்னேரி: பொன்னேரி அருகே போலீசார் நடத்திய சோதனைகளில் 4 கிலோ கஞ்சா, 1170 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த பிரதீப் (31) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். போதை மாத்திரைகளை கடத்தி வந்த சிவாஜி, பாரதி, செல்வகுமார், சக்தி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
