சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 4 பேரையும் பணி நீக்கம் செய்து மருத்துவமனை டீன் கவிதா உத்தரவிட்டுள்ளார்.
