சென்னை: நெறியாளர் விஜயனை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்து அவர் எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார் என்பதை கூட தெரியப்படுத்தாமல் அலைக்கழித்த சம்பவம் காவல்துறைக்கு ஒரு கரும்புள்ளி என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறை முதலமைச்சர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ரீல்ஸ் மாஃபியா கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
