கெலமங்கலத்தில் 7ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து சாவு

கிருஷ்ணகிரி, ஜூலை 17: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமப்பா. இவரது மகள் லேக்னா (13), தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11ம் தேதி, பள்ளி விடுமுறையின்போது, வீட்டில் இருந்த லேக்னா, வேலை செய்யாமல் இருந்ததால் தாய் திட்டியுள்ளார். இதனால், மனவேதனையடைந்த லேக்னா, அன்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து விட்டு மயங்கினார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, லேக்னா உயிரிழந்தார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: