சொத்து பிரச்னையில் தகராறில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு

 

போச்சம்பள்ளி, ஜூலை 16: கிருஷ்ணகிரி மாவட்டம், கொடமாண்டப்பட்டி அருகே மேல்சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மு (38). அதே பகுதியை சேர்ந்த ரகு என்பவரை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், குடும்ப பூர்வீக சொத்து தொடர்பாக, நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், அம்முவை அவரது கணவர் வீட்டார் வீட்டில் வசிக்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொத்து பிரச்னை தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் அம்முவை, அவரது உறவினர்கள் ஆபாசமாக பேசி திட்டினர். இது குறித்து அம்மு போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் அம்முவின் மாமனார் சம்பத் (65), மாமியார் தமயந்தி (60), கணவரின் சகோதரி ரம்யா (38), அவரது கணவர் பழனி (45) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: