தேன்கனிக்கோட்டை, ஜூலை 21: தேன்கனிக்கோட்டை அருகே கவுதாளம் கிராமத்தில் வசிப்பவர் மாரப்பன் மகன் சக்திவேல் (26), கூலித்தொழிலாளி. இவர் 17 வயதான உறவு பெண்னை காதலித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாகியுள்ளார். நேற்று முன்தினம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது சிறுமி, மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சிறுமியை திருமணம் செய்த சக்திவேல் மீது போக்ேசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
