சிறுமிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்போக்சோவில் கைது

 

நாமகிரிப்பேட்டை, ஜூலை 16: நாமகிரிப்பேட்டை அருகே, சிறுமியிடம் காதலிக்க வற்புறுத்தி தாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் அருண்குமார்(25). கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்து, அருண்குமாரிடம் பேசாமல் அங்கிருந்து செல்ல முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார், அந்த சிறுமியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுமி, தன் வீட்டிற்கு சென்று நடந்த விபரத்தை தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஆயில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: