சூலூர் சிறுமி வன்கொடுமை, கொலை வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை

கோவை, ஜூலை 15: கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கடந்த மே மாதம் 21-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கார்த்திக் (35), உடந்தையாக இருந்த மோகன்(31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் 104 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சாட்சிகள் விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நீதிபதி விவேகானந்தன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மருத்துவ பரிசோதனை செய்த ஊழியர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் உள்பட 16 பேர் நேற்று சாட்சியம் அளித்தனர். அவர்களது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் சாட்சிகள் விசாரணை நடக்கிறது.

 

Related Stories: