தொண்டாமுத்தூர், ஜூலை 15: கோவை பேரூர் அருகே பச்சாபாளையம் பாரதியார் வீதியை சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் வீராசாமி. இவரது மகன் பிரதாப் (23). இவர் கோவை சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
நள்ளிரவு 3 மணிக்கு சிறுவாணி மெயின் ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை நசுங்கி சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
