குரூப் 2, குரூப் 2ஏ பணிக்கான தற்காலிக தேர்வர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்

 

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பனோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி2 மற்றும் தொகுதி 2ஏ பணிகள்)-ற்கான முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த மாதம் 29ம் தேதி அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கணிவிழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் 13ம் தேதி (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது.

கணிவிழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை வருகிற 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவின் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சான்றிதழ்களை உரிய நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள், தெரிவின் அடுத்த கட்டநிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: