சென்னை: மதுரை வைகை, திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.! திருச்சி கோட்டத்திற்குட்பட்ட பொன்மலை ரயில்வே யார்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8-வது வழித்தடப் பாதை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12635) இன்று (ஜூலை 13, 2026) மதியம் 1.15 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து மதுரை நோக்கிப் புறப்பட வேண்டிய வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இந்தத் தொழில்நுட்பப் பணிகள் காரணமாக வழியில் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
சோழன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22675)வருகிற ஜூலை 15ம் தேதி (புதன்கிழமை) அன்று காலை 8 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி நோக்கிப் புறப்பட வேண்டிய சோழன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், வழியில் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.புதிய ரயில் பாதை பயன்பாட்டிற்கு வருவதற்கான இந்தப் பணிகள் அவசியமானவை என்பதால், பயணிகள் இந்தச் சேவையினைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிட ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
