வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு வைகோ ஆறுதல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: வியட்நாமின் தென் பகுதியில் உள்ள பூ குவாத் தீவு அருகில் நடுக் கடலில், சுற்றுலா படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் உள்ளிட்ட 36 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த துயரச் செய்தி அறிந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹடிபி மானியை சிறப்பு அலுவலராக வியட்நாமின் ஹோசிமின் நகருக்கு அனுப்பி வைத்து உரிய மீட்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதலை தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: