வேடசந்தூர், ஜூலை 10: வேடசந்தூர் அய்யனார் நகரை சேர்ந்தவர் நாகராஜ்(61). பாத்திர வியாபாரி. இவர் நேற்று முன் தினம் இரவு, தனது உறவினரான சரசு (55) என்பவருடன், டூவீலரில் மூலச்சத்திரத்தில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். அப்போது சேனங்கோட்டை கால்நடை மருத்துவமனை அருகே முன்னால் சென்ற தண்ணீர் லாரியின் மீது பின்பக்கமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் உயிரிழந்தார். சரசு காயங்களுடன் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
