காரில் வைத்திருந்த ரூ.2.10 லட்சம் அபேஸ்: போலீசார் விசாரணை

 

கள்ளக்குறிச்சி, ஜூலை 10: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியம் ஈய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் செந்தில்குமார்(45), கார் டிரைவர். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் எடுத்துள்ளார். பின்னர் அந்த பணத்தில் ரூ.5 ஆயிரம் பணத்தை தனது சட்டை பையில் வைத்துள்ளார். மீதமுள்ள ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை ஒரு பையில் சுற்றி தனது காரில் முன்பக்கத்தில் வைத்துள்ளார்.இதை தொடர்ந்து செந்தில்குமார் தனது காரை கள்ளக்குறிச்சி சேலம் மெயின்ரோடு பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை முன் நிறுத்திவிட்டு தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் தனது காரை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தார்.

வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்து காரில் வைத்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் செந்தில்குமார் காரை பின்தொடர்ந்து வந்து, காரை நிறுத்திவிட்டு எலக்ட்ரிக்கல் கடைக்கு செந்தில்குமார் சென்ற நேரத்தில் கார் கதவை திறந்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இது குறித்து செந்தில்குமார் கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி பகுதி மற்றும் சேலம் மெயின்ரோடு கடை பகுதியில் கார் நிறுத்தப்பட்டு இருந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: