புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவரை, மர்ம நபர் தொடர்புகொண்டு புக் டீலர் எனக்கூறி அறிமுகமாகியுள்ளார். பின்னர், குறைந்த விலையில் புக் விற்பனைக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய பெண் பல்வேறு தவணைகளில் ரூ.18,685 மர்ம நபருக்கு அனுப்பி ஏமாந்துள்ளார்.வில்லியனூரை சேர்ந்த ஆண் நபரின் செல்போனில் அவருக்கு தெரியாமல் செயலி ஒன்று பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர், அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.21 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ரூ.5 ஆயிரம், நவீன் கார்டனை சேர்ந்த ஆண் நபர் ரூ.2 ஆயிரம் என மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
