விருத்தாசலம் பகுதியில் பைக்குகள் திருடிய 2 பேர் கைது: 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

 

விருத்தாசலம், ஜூலை 10: விருத்தாசலம் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் வந்தன. இது குறித்து பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களின் பேரில், மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா மற்றும் விருத்தாசலம் டிஎஸ்பி உத்தரவின்பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தும், ரகசிய தகவல் மூலமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வந்தனர்.அதில், பைக் திருட்டில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்டம் மேரிபுரத்தைச் சேர்ந்த விஜயேந்திரன் மகன் ஹரிஹரன்(50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Related Stories: