சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து மங்களூரு மற்றும் கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் – மங்களூரு இடையே வரும் 14, 21, 28, ஆகஸ்ட் 4, 11, 18, 25, செப்.1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே வரும் 13, 20, 27, ஆகஸ்ட் 3, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
