சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா அறக்கட்டளையின் சமூக மருத்துவ சேவை

 

மதுரை, நரிமேட்டில் அமைந்துள்ள சரவணா பல்நோக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் டாக்டருமான பா.சரவணன் கூறியதாவது: மதுரை சரவணா பல்நோக்கு மருத்துவமனையில், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எல்லாவிதமான சிகிச்சைகளும் சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருவதே எங்களின் சிறப்பம்சமாகும். குறைந்த செலவில் சிறப்பான மருத்துவம் அளிப்பதால் ஏழை மக்கள் எங்களைத் தேடிவருகிறார்கள். எங்கள் மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, எலும்புமூட்டு அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் வயிறு சம்மந்தப்பட்ட நோய்களுக்கான அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கு பிறவி இருதய கோளாறுகளுக்கான சிகிச்சை என்பது உள்பட பல்வேறு வகையான சிகிச்சைகளை குறைந்த செலவில் வழங்கி வருகிேறாம்.

மதுரை சரவணா மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் 40க்கும் மேற்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் உள்ளது. சரவணா மருத்துவமனையின் சூர்யா தொண்டு நிறுவனம் மூலம், 200க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. மேலும், விபத்து மற்றும் பிற காரணங்களால் கை, கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக அதிநவீன செயற்கை கை, கால்கள் எண்ணற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சரவணா பாராமெடிக்கல் கல்லூரி மூலம், ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச நர்சிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மருத்துவமனையின் சிகிச்சைகள் தொடர்பாக 0452-244 6000, 244 6005 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.

 

Related Stories: