திருப்பூர், ஜூலை 10: திருப்பூர் கே.பி.பி கார்டன் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் திருப்பூரை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் பணியாற்றி வந்தார். அவரை 17 வயது சிறுவன் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி தகராறில் தாக்கினார். இதைத்தொடர்ந்து, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறுவனை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இது குறித்த வழக்கு விசாரணை இளம்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
