டெல்லி: பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் திட்டம் இன்றும் பரிசோதனை கட்டத்தில்தான் உள்ளதாகவும், இதன் முழுமையான தாக்கம் மற்றும் முடிவுகள் அடுத்த ஆண்டுதான் தெளிவாகத் தெரியும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பகீர் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், அது அரசின் கொள்கை முடிவு என்பதால், திட்டத்தில் மாற்றம் இருக்காது என்று அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி தெரிவித்துள்ளார்.
