SIR-க்கு எதிராக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 23 கட்சிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்!

டெல்லி: SIR மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தால் மற்றும் நீக்குதல் திட்டத்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட 23 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சூர்யகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். SIR-க்கு எதிராக திமுக, திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட 23 கட்சிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையால் வாக்குரிமை பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு சாட்டினார்.

கடந்த 8ஆம் தேதி நடந்த இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் கடிதம் எழுதப்பட்டுள்ளது; இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்காத திமுக, ஆம் ஆத்மி கட்சிகளும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் மூலம் தங்களுக்கு ஆதரவான வாக்காளர்களை அதிகளவில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும், அதே நேரத்தில் தங்களுக்கு எதிரான பெண்கள் மற்றும் சிறுபான்மை உள்ளிட்ட வாக்காளர்களை பெயர் நீக்குவதும் என தேர்தல் ஆணையம் மூலம் ஒன்றிய பாஜக அரசு தில்லு முள்ளுகள் அரங்கேறி வருகிறது. இதற்கு நாடுமுழுவதும் உள்ள அரசியல் காட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே பீகார் எஸ்ஐஆர் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எஸ்.ஐ.ஆர் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனிடையே பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் டெல்லியில் இன்று எஸ்ஐஆர் பணிகள் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: