ஆலந்தூர்: புழுதிவாக்கம் 186வது மேற்கு வட்ட தவெக சார்பில், தமிழக முதல்வர் விஜய் ஜோசப் பிறந்தநாளையொட்டி 500 பேருக்கு காலை உணவு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் விழா புழுதிவாக்கம் செங்கேணியம்மன் கோயில் தெரு மற்றும் புழுதிவாக்கம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 2 இடங்களில் நேற்று நடந்தது. விழாவிற்கு, புழுதிவாக்கம் 186வது மேற்கு வட்ட தவெக செயலாளர் பர்மன் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் மோசை ராஜன் முன்னிலை வகித்தார்.
செங்கேணியம்மன் கோயில் தெருவில் நடந்த விழாவில், 500 பேருக்கு இட்லி, சிக்கன் குருமா மற்றும் இனிப்பும், புழுதிவாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், இனிப்பு ஆகியவற்றை மேற்கு வட்ட செயலாளர் பர்மன் ஜெயச்சந்திரன் வழங்கி, முதல்வர் விஜய் ஜோசப்பை வாழ்த்தி பேசினார். விழாவில், 185வது மேற்கு வட்ட செயலாளர் பால குமரன், 186வது கிழக்கு வட்ட செயலாளர் கே.சதீஷ், 187வது கிழக்கு வட்ட செயலாளர் அனந்தராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
