நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாயார் பகுதியில், வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை ஒன்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீட்டில் நாயை பிடிக்க முயன்ற சிறுத்தையை, வீட்டின் உரிமையாளர் தைரியமாக அறைக்குள் பூட்டி சிக்கவைத்தார். தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் சிறுத்தையை மீட்க முயன்ற நிலையில், பொதுமக்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் வலியுறுத்தினர். உரிமையாளரின் துணிச்சலான செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
