×

மகளிர் டி.20 உலக கோப்பை; கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியா! வங்கதேசத்துடன் நாளை மோதல்

 

மான்செஸ்டர்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் மான்செஸ்டரில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் 23வது லீக் போட்டியில் குரூப் 1 பிரிவில் இந்தியா-வங்கதேசத்துடன் மோதுகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான், 2வது போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா, 3வது போட்டியில் தென்ஆப்ரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதனால் எஞ்சிய 2 போட்டியிலும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெற முடியும் என்ற நெருக்கடியில் இன்று களம் இறங்குகிறது. பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 159 ரன் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். பவுலிங்கில் சரணி 10 விக்கெட் எடுத்து டாப்பில் இருக்கிறார்.

மற்ற யாரும் பெரிதாக சாதிக்கவில்லை. மறுபுறம் வங்கதேசம் 3போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது. மீதமுள்ள 2போட்டியிலும் வென்றால் மட்டுமே அரையிறுதி என்ற நிலையில் தான் அந்த அணியும் உள்ளது.நேருக்கு நேர்: இரு அணிகளும் இதற்கு முன் 23 முறை டி.20 போட்டியில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 20ல் இந்தியா, 3ல் வங்கதேசம் வென்றுள்ளது. கடைசியாக மோதிய 7 போட்டியிலும் இந்தியா தான் வென்றுள்ளது. உலக கோப்பையில் இதற்கு முன் மோதிய 3 போட்டியிலும் இந்தியா தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Women's T20 World Cup ,India ,Bangladesh ,Manchester ,ICC Women's T20 World Cup ,England ,
× RELATED சில்லி பாயின்ட்…