×

சில்லி பாயின்ட்…

* இந்திய மகளிர் அணி சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரீ சரணி சர்வதேச டி20 ப்போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசையில் முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

* அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதுமுக ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெக்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

* ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக செல்ல உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 போட்டித் தொடரில் நேற்று நடந்த 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 131 ரன் எடுத்தது. அடுத்த விளையாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Tags : Chilli Point… ,Sri Sarani ,T20 Internationals ,Nitish Kumar ,Ireland ,England ,T20 ,
× RELATED ஐபிஎல் 2027: ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும்,...