×

ஃபிரீ கிக்கில் மிரட்டிய கெவின் பினா

 

மயாமி அரங்கில் உருகுவே-கபோ வெர்டே அணிகளுக்கு இடையே நடந்த எச் பிரிவு லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 21வது நிமிடத்தில் கிடைத்த லாங் ரேஞ் ஃபிரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கபோ வெர்டே வீரர் கெவின் பினா அடித்த அற்புதமான கோல் உருகுவே தரப்பை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அவ்வளவு தூரத்தில் இருந்து, சுவர் போல அணிவகுத்து நின்ற வீர்களையும் கோல் கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெராவையும் தாண்டி கெவின் கோல் அடிப்பார் என்பதை யாராலும் கற்பனை கூட செய்திருக்க முடியாது.

அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட உருகுவே அணிக்கு மேக்ஸி அராஜோ (44வது நிமிடம்), அகஸ்டின் கனோபியோ (45+6’) கோல் அடிக்க, இடைவேளையின்போது உருகுவே 2-1 என முன்னிலை வகித்தது. எனினும், இரண்டாவது பாதியில் கபோ வெர்டேவின் ஹெலியோ வரெலா (61வது நிமிடம்) அபாரமாக கோல் போட்டு 2-2 என டிரா செய்ய உதவினார். எச் பிரிவில் முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிராக 0-0 என டிரா செய்த கபோ வெர்டே, அடுத்து பலம் வாய்ந்த உருகுவேயையும் தடுத்து நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஃபிரீ கிக் ஹீரோ கெவின் பினாவை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

Tags : Kevin Pina ,Uruguay ,Cape Verde ,Miami Arena ,
× RELATED உலகக் கோப்பை குத்துச்சண்டை...