- குல்தீப்
- லக்னோ
- ரிஷாபத்
- தில்லி
- புது தில்லி
- ரிஷாப் பந்த்
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்
- ஐபிஎல்
- தலைநகரங்களில்
- குல்தீப் யாதவ்
புதுடெல்லி: ஐபிஎல்ல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டனாக இருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை லக்னோ அணி பேரம் பேசி வாங்கியுள்ளது. 2016ல் இருந்து 2024 வரை 9 சீசன்களாக டெல்லி அணிக்கு விளையாடிய ரிஷப் பன்ட்டை லக்னோ அணி 2025 ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.
எனினும், கடந்த 2 சீசன்களாக ரிஷப் ஆட்டம் திருப்தி அளிக்காத நிலையில், வீரர்களை மாற்றிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் லக்னோ – டெல்லி கேப்பிடஸ் இடையே நடந்த பேரத்தில், ரிஷப் டெல்லி அணிக்கு மாறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாட உள்ளார். ரிஷப் ஊதியம் ரூ.27 கோடியில் இருந்து ரூ.15 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் குல்தீப் யாதவ் டெல்லி அணியில் தற்போது பெற்று வந்த அதே 13.5 கோடி ருபாயை லக்னோவிடம் இருந்து பெற உள்ளார். இதனால் லக்னோ அணிக்கு ரூ.13.5 கோடி மிச்சமாகி உள்ளது. இது அடுத்த ஏலத்தில் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம் டெல்லி அணிக்கு ரூ.1.5 கோடி கூடுதல் செலவாகும்.
