கரூர்- கோவை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலால் விபத்து அபாயம்

கரூர், ஜூன் 24: கரூர் கோவை சாலை 80 அடி சாலை பிரிவு அருகே வாகனங்கள் குறுக்கீடு காரணமாக அடிக்கடி விபத்து நடைபெறும் சூழல் உள்ளது. இதனை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூரில் இருந்து கோவை, ஈரோடு, பொள்ளாட்சி, பழனி, நாமக்கல், சேலம், மதுரை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோவை சாலையின் வழியாக சென்று திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் பிரிந்து செல்கிறது.

இந்த கோவை சாலையில் குறிப்பிட்ட துாரத்தில் 80 அடி பகுதிக்கு செல்லும் சாலை பிரிகிறது. இந்த பகுதியின் உட்புறம் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும் உள்ளதோடு, ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் 80 அடி சாலையில் பிரிந்து சென்று வருகிறது. கோவை சாலையில் இருந்து பிரதான 80 அடி சாலைக்கு வாகனங்கள் முறையாக பிரிந்து செல்லாமல் முன் அறிவிப்பு வாகனங்கள் குறுக்கிட்டு செல்வதால் அவ்வப்போது விபத்து்ககளும் ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்னையை கட்டுப்படுத்திட துறை அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் தேவையான ஏ ற்பாடுகுளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: