பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி நாகையில் விவசாயிகள் உண்ணாவிரதம்

 

நாகை: நாகை அருகே கீழூவேளூரில் கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் அறிவித்தவாறு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த அத்திப்புலியூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் கைகளில் திருவோடுகளை ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கவுரவ தலைவர் ராமதாஸ், மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட தலைவர் விஜயராஜ், மாவட்ட பொருளாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினர்.

உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்ட கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். உண்ணாவிரத போராட்டத்தின் ஒரு பகுதியாக அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் பங்கேற்று வாழை இலையில் மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடத்தினர்.

 

Related Stories: