சென்னை: சென்னை புழல் காவாங்கரை சிக்னல் அருகே பெண் நடத்துநருக்கு பாலியல் தொல்லை தந்ததாக ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாலை 4 மணிக்கு பணிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த போது நடத்துநரிடம் அத்துமீறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் நடத்துநர் அளித்த புகாரின் பேரில் ரவுடி ராஜேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
