கரூர், ஜூன் 18: தென்னை மரக்கீற்றுளை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: தென்னங்கீற்றுகளின் அடிப்பரப்பை நோக்கி தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். 1 லிட்டர் தண்ணிருக்கு வேப்பெண்ணெய் 5 மிலி மற்றும் ஒட்டும் திரவம் 1 மிலி என்ற அளவில் கலந்து மரங்களின் அடிக் கீற்றுகளில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.மஞ்சள் நிற பாலித்தீன் பைகளால் ஆன ஒட்டுப் பொறிகள் ஏக்கருக்கு 8 எண்ணிக்கையில் வைத்து ஈக்களை அழிக்கலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
