நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி என்று தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருந்ததாவது:
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் ‘‘நியமனம்’’ செய்ததாக சொன்ன ‘‘திறமையான அதிகாரிகள்’’ என்ன செய்கிறார்கள் முதல்வரே?. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி. இவ்வாறு பதிவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: