மின்வெட்டை சரிசெய்ய வலியுறுத்தி 20ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தவெக ஆட்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக, நாள்தோறும்பெருத்த இன்னல்களுக்கு ஆளாகி, மக்கள் ஆங்காங்கே சாலைகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமைகள் அன்றாடம் நடைபெறுகிறது. அதேபோல், பயிர்க்கடன் தள்ளுபடி விஷயத்திலும் விவசாயிகளை வஞ்சித்துள்ளது தவெக அரசு.

இதை கண்டித்து அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 20ம் தேதி மாலை 5 மணிக்கு மதுராந்தகம் நகரம், தேரடி வீதியில் பொதுக்கூட்டம் நடைபெறும். அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தலைமையிலும்; செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் தனபால், பரங்கிமலை தெற்கு ஒன்றியக் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: