சில்லுவண்டி ஆட்சி நடக்குது ஒரு அமைச்சருக்கும் அறிவு இல்ல… தட்டிக்கேட்க விஜய்க்கு துப்பில்ல…: எச்.ராஜா ‘பயர்’

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி:
பாஜ ஒரு சித்தாந்த கட்சி. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் கூட பெரிய மனுஷன் ஆனவர்கள் உண்டு. ஆனால், பாஜவில் இருந்து வெளியே சென்று பிரகாசித்தவர்கள் ஒருவர் கூட கிடையாது. அண்ணாமலை பாஜவை விட்டு வெளியேறியதால் எந்த பின்னடைவும் இல்லை. 2014ல் பாஜ 19 சதவீத வாக்கு வங்கி வைத்திருந்தது. ஆனால் 2024ல் அண்ணாமலை இருந்தபோது வாங்கிய வாக்குகள் 18 சதவீதம். ஒரு சதவீத வாக்குகள் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மை இல்லாமல், சில்லுவண்டிகளை வைத்து பெரும்பான்மையை காட்டி விஜய் ஆட்சி அமைத்துள்ளார்.

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 30 நாளில் 40க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பரந்தூருக்கு பறந்து போனவர் ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க போகவில்லை? இன்று ஒரு தீயசக்தி முதல்வராக உள்ளார். பொறுப்பற்ற, தான்தோன்றித்தனமாக மக்கள் மீது அக்கறையற்ற அரசாங்கம் தமிழகத்தில் நடந்து வருகிறது. மக்கள் ஆதரவு முழுமையாக இல்லாத அரசு. பிஞ்சு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பிச்சு வீசப்படுகின்றனர். முதல்வராக நான் இருந்திருந்தால் ராஜினாமா பண்ணியிருப்பேன்.

மத்திரியாக இருக்கிறவர்கள் ஒருவர் கூட அறிவார்ந்தவர்களாக இல்லை. பணம் டீல் செய்யக்கூடிய மார்ட்டின் குடும்பத்தால் இந்த அரசாங்கம் ஆட்டி வைக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமையை தட்டி கேட்க ஜோசப் விஜய் அரசுக்கு துப்பில்லை. தமிழ்நாட்டின் துரதிருஷ்டம் இதுபோன்ற சர்க்கார் அமைந்துள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: