சவாலும் -சவடாலும் விட்டவர் சைலண்ட் மோடில் இருந்து எப்போது வெளியே வருவார்..? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை: சவாலும்-சவடாலும் விட்டவர், எப்போது சைலன்ட் மோடில் இருந்து வெளியே வருவார் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
‘‘திறமையான அதிகாரிகளை நியமித்துவிட்டேன்” ‘‘சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்” என்று சீறிய முதல்வரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?. மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு ‘கால்ஷீட்’ எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் – சவடாலும் விட்டவர், எப்போது சைலன்ட் மோடில் இருந்து வெளியே வருவார்?. மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?. இல்லை, திமுகவின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?. ஒய் சைலன்ட் சிஎம்?. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: