புதுச்சேரியில் நாளை 3 அமைச்சர்கள் பதவியேற்பு

 

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 புதிய அமைச்சர்களாக என்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து, பாஜக ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆகியோர் நாளை பதவியேற்கின்றனர். புதுச்சேரியின் 16வது சட்டபேரவை தேர்தலில் தேஜ கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது.

இதையடுத்து தேஜ கூட்டணியின் தலைவரான ரங்கசாமி மே 13ம்தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம் (பாஜ), மல்லாடி கிருஷ்ணாராவ் (என்ஆர் காங்.) ஆகியோரும் பதவியேற்றனர். மே 18ம்தேதி தற்காலிக சபாநாயகராக அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பதவியேற்ற நிலையில் 20ம் தேதி 28 எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் நாளை (17ம்தேதி) பழைய கவர்னர் மாளிகை வளாகத்தில் நடைபெறும் விழாவில் 3 புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இதில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு ராஜவேலு, சிவக்கொழுந்து, ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆகியோருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

 

Related Stories: