மதுரை: கடும் மனநலன் பாதிப்பு குற்றச்சாட்டுகளுடன் கூடிய விவாகரத்து வழக்குகளில், தனியுரிமை காக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு விடுத்துள்ளது. இது தொடர்பாக மக்களின் பார்வைக்கு கிடைக்கும் உத்தரவுகள், மனுக்கள், நீதிமன்ற பதிவேட்டில் பெயர் போன்ற விபரங்கள் இல்லாமல் X, Y என குறிப்பிட வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது . திருமணம் சார்ந்த மற்றும் விவாகரத்து வழக்குகளை விசாரிக்கும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
