சென்னை: மின் பழுதுகளை சரி செய்ய தேவையான 15,058 மின் பணியாளர்களை நியமிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து மின் பணியாளர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் ஆணையிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ரூ.10,109 கோடியில் 121 புதிய, மேம்படுத்தப்பட்ட மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்த கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
