இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை: அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு

வாஷிங்டன்: ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்திய மாலுமிகள் இயக்கிய மூன்று கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. அவற்றில் ஒன்றில் ஏற்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் ஹார்முஸ் நீரிணையில் இருந்து வெளியேறும் இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குற்றச்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் ஈரான் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி 3 அப்பாவி இந்திய மாலுமிகளை அமெரிக்கா கொன்றது என்ற கொடூரமாக உண்மையில் இருந்து கவனத்தை திசைதிருப்ப டிரம்ப் முயற்சிக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு இந்தியா கண்டனம்
ஐரோப்பிய பயணத்தில் உள்ள சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருடன் தொலைபேசியில் பேசினார். இது குறித்து அமைச்சர் தனது சமூக ஊடக பதிவில், ‘‘அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் பேசினேன். வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்தேன். இத்தகைய உயிரிழப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நியாயமற்றவை என்று வலியுறுத்தினேன்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories: