அசாம்: அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் ஏஎன்-32 ரக விமானம் தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் முதலில் திடீரென தீப்பற்றியதால் வெடித்து சிதறியது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஓடுதளத்தில் தரையிறங்கிய சில நொடிகளில் விமானம் வெடித்து தீப்பற்றியது. விமானம் வெடித்து தீப்பிடித்தவுடன் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது.
