ஐரோப்பிய நாடுகளில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 13) முதல் வரும் 19-ஆம் தேதி வரை ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி ‘ஜி 7’ மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

நாளை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்துகிறார். ஜி7 மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களை மோடி சந்தித்து பேச வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

 

Related Stories: