தண்ணி வரல, மின்வெட்டு என தவெக ஆட்சியில பல பிரச்னை இருக்கு: அமைச்சர் ஜெகதீஸ்வரி ஒப்புதல்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் வளர்ச்சி பணிகள் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான் பொறுப்பு அமைச்சர் என்பது யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் புதுசு தானே, இவர்களுக்கு என்ன தெரியும் என நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. எங்களுக்கும் எல்லாம் தெரியும். அமைச்சர் பதவி தான் புதுசு.

அரசு அதிகாரிகள் யாரும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரேனும் உங்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு எந்த குறையும் இல்லை என கூறுகிறார்கள். ஆனால், தண்ணீர் வரவில்லை, மின்வெட்டு என பல பிரச்னைகள் உள்ளது. எவ்வளவு சீக்கிரம் மக்கள் கோரிக்கையை நீங்கள் சரி செய்ய வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் சரி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரின் ஆய்வுப்பணி குறித்து தகவல் தெரியாததால் மாவட்ட செயலாளர் சின்னப்பர், ‘எந்த தகவலும் இல்லை. நானாக போன் செய்து தான் கேட்டு தெரிந்து கொண்டேன்’ என புலம்பியபடி சென்றார். இதுதொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் தவெகவினர் முறையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர், வெளியே மனு கொடுக்க காத்திருந்த பொதுமக்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்திக்காமல் வேகமாக கிளம்பி சென்றார்.

Related Stories: