நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் மேலாண்+மை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான ஷாஜகான் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்ட முடிவில் அமைச்சர் ஷாஜகான் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு எங்கும் இல்லை, மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு வீசிய கடும் காற்றால் சில பகுதிகளில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. அதுவும் சில மணி நேரங்களில் சரிசெய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் எந்த இடத்திலும் மின்தட்டுப்பாடு இல்லை.
இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். வரும் நிதிநிலை அறிக்கையில் மக்கள் பயன்பெறும் புதிய திட்டங்கள் இடம் பெறும். இவ்வாறு அவர் கூறினார். காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ம்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா என்ற கேள்விக்கு, மேட்டூர் அணையில் நீர்மட்டம் தற்போது 79 அடியாக உள்ளதால், நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்.
