இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவகை பெட்டி ஒன்றுக்கு ரூ.90 கூடுதல் கட்டணம்: தமிழ்நாடு அரசு

சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவகை பெட்டி ஒன்றுக்கு ரூ.90 கூடுதல் கட்டணம் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பீர் வகைகள் பெட்டி ஒன்றுக்கு ரூ.40 கூடுதல் கட்டணம் வசூலிக்கவும், ஒயின் வகை பெட்டி ஒன்றுக்கு கூடுதலாக ரூ.20 கட்டணம் வசூலிக்கவும் அரசாணை வெளியிட்டுள்ளது. அனைத்து மது உற்பத்திக்கும் கூடுதல் கட்டணம் வசூலிப்பால் அதன் விலையை தாயரிப்பு நிறுவனங்கள் உயர்த்தும். குவார்ட்டருக்கு 2 ரூபாய் வரையிலும் ஒரு லிட்டர் மதுபான பாட்டில் விலையில் ரூ. 10ம் உயர வாய்ப்பு என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: