மதுரை: தேர்தல் அறிக்கையில் தவெக அறிவித்தபடி மீனவர்களுக்கு ரூ. 20,000 இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு தொடர்பாக மீன்வளத்துறை செயலாளர், உள்துறை, நிதித்துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
