ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலை முதலே டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்த அவர்கள், அங்குள்ள அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், வியூபாயிண்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோயில், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் இயற்கை அழகை ரசித்தனர்.

மேலும் ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். இதேபோல் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லிலும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

Related Stories: