தென்காசி அருகே பரபரப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை சென்னை போலீஸ்காரர் கைது

புளியங்குடி: தென்காசி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை போலீஸ்காரர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(26). இவர், தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2024-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தற்போது அவர் சென்னை ஆவடி பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் விஜயகுமார் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

அப்போது ஒரு பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் தகவலங் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் போலீஸ்காரர் விஜயகுமார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று காலை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: