கலைஞரின் கனவுகள் காலங்கள் கடந்து தமிழின் திசையெங்கும் ஒளிவீசி நிற்கும்: முதல்வர் விஜய் புகழாரம்

சென்னை: கலைஞர் 103வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.தமிழின் மூச்சாய் வாழ்ந்தவர் நீர், முன்னேற்றப் பாதையை காட்டிய ஒளி நீர்.சொல்லால் சமுதாயம் செதுக்கிய சிற்பி,செயலால் தமிழகத்தை உயர்த்திய கற்பி.

எழுத்திலும் பேச்சிலும் எந்நாளும் அரசர், ஏழையின் இதயத்தில் என்றும் நிலைபெற்றவர். கலைஞரின் கனவுகள் காலங்கள் கடந்தும், தமிழின் திசையெங்கும் ஒளிவீசி நிற்கும். பிறந்த நாள் இன்று, புகழ் நாள் என்றும், பேரறிஞர் வழியில் பயணம் தொடர்ந்தும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு என்றும் எங்கள் அன்பும் வணக்கமும்.

Related Stories: