பதிவுத்துறையில் அதிரடி 7 மாவட்ட பதிவாளர்கள் 43 சார்பதிவாளர் மாற்றம்

சென்னை: தமிழக வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை வடக்கு தணிக்கை மாவட்ட பதிவாளர் சீதாலட்சுமி, தாம்பரம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், தாம்பரம் தணிக்கை மாவட்ட பதிவாளர் சுனிதா, அம்பத்தூர் சார்பதிவாளராகவும், திண்டுக்கல் தணிக்கை மாவட்டப் பதிவாளர் பெரியசாமி, கோவை இணை சார்பதிவாளர் 1 ஆகவும், மார்த்தாண்டம் தணிக்கை மாவட்டப் பதிவாளர் செல்வக்குமாரி, பாளையங்கோட்டை நிர்வாக மாவட்டப் பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் தணிக்கை மாவட்டப் பதிவாளர் சிவக்குமார், ஈரோடு இணை சார்பதிவாளர்1 ஆகவும், காரைக்குடி மாவட்டப் பதிவாளர் இயலரசி, திருச்சி இணை சார்பதிவாளர்1 ஆகவும், தஞ்சாவூர் தணிக்கை மாவட்டப் பதிவாளர் செந்தில்நாதன், திருச்சி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கோபிச்செட்டிபாளையம் இணை 1 சார்பதிவாளர் ராஜமுனியப்பன், ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளராகவும், திருவள்ளூர் பேரம்பாக்கம் சார்பதிவாளர் முகமது ரபி, திருக்கழுக்குன்றம் சார்பதிவாளராகவும், கோவை வடவள்ளி சார்பதிவாளர் கிருஷ்ணசாமி, ஆவடி சார்பதிவாளராகவும், கோவை அன்னூர் சார்பதிவாளர் எஸ்.என்.ராஜா, செங்கல்பட்டு இணை 2 சார்பதிவாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தென் சென்னை இணை 1 சார்பதிவாளராகவும், குன்றத்தூர் சார்பதிவாளர் கண்ணன், வேளச்சேரிக்கும், தென் சென்னை நிர்வாக சார்பதிவாளர் சரவணன், குன்றத்தூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை நீலாங்கரை சார்பதிவாளர் சண்முகம், தென் சென்னை சீட்டு மற்றும் சங்கத்திற்கும், தென் சென்னை சீட்டு மற்றும் சங்க சார்பதிவாளர் அசோக்குமார், நீலாங்கரைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும் 43 சார் பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: