2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது: அப்பாவு வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை: 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். போட்டியிட்ட இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றிபெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது.

இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என பொருள் ஆகாது. ஆனால், இந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ. பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை இன்பதுரை உரிமையாக கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

Related Stories: